For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓவியாவுக்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்டிருக்கலாமே.. அன்புமணி பொளேர்!

ஓவியாவுக்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்டிருக்கலாமே.. அன்புமணி பொளேர்!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

அரியலூர்: நடிகை ஓவியாவிற்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை தனக்கு போட்டிருந்தால் தமிழகத்தை காத்திருப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட கடைகளை சட்டப்போராட்டஙகள் மூலம் மூட வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அரியலூரில் பாராட்டு விழா நடந்தது.

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போன்று விவசாயிகள் போராட்டத்திற்கும் ஆதரவாக ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றார்.

 பாமக பங்கு

பாமக பங்கு

இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், டாஸ்மாக் கடைகளை எதிர்த்து போராடியதில் பாமகவின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். தனக்கு முதலமைச்சராகும் ஆசை இல்லை மக்களுக்காக பணியாற்றுவதே விருப்பம் என்றார்.

 ரஜினிக்கு கண்டிப்பு

ரஜினிக்கு கண்டிப்பு

சமூக அக்கறை மற்றும் மக்கள் நலன் கொண்டு செயல்படும் ஒரே கட்சி பாமக என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று இப்போது சொல்லும் நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 கருணாநிதியுடன் இருந்தாரே

கருணாநிதியுடன் இருந்தாரே

மேலும் சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியுடன் ஒரே மேடையில் இருந்த போது இதனை சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றார் அன்புமணி ராமதாஸ். இதைத்தொடர்ந்து, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை பாதுகாப்பதற்காக ரசிகர்கள் போட்ட வாக்குகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.

 ஓவியாவுக்கு ஓட்டு

ஓவியாவுக்கு ஓட்டு

"கொஞ்சம் கூட ஈனம், மானம் ரோஷம் இல்லையா? சினிமாக்காரருக்கு ஓட்டு போட்டு காப்பாத்துறீங்க, நடிகை ஓவியாவிற்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்டிருந்தால் தமிழகத்தை இப்போது நான் காப்பாற்றியிருப்பேனே" என்று அன்புமணி வறுத்தெடுத்துவிட்டார்.

English summary
PMK youth wing president Anbumani slams that those who voted to save Oviya from Big Boss show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X