ராமதாஸ் சொல்றபடிதான் இனி தேர்தல் கூட்டணி: அன்புமணி உறுதி
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் விரும்புகிற கூட்டணியையே இனிமேல் ஏற்போம் என்று அவரது மகனும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமண் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி ஜெயலலிதாவுக்கு இல்லை. நாம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற கோபம்தான் அவருக்கு இருக்கிறது.
இத் தேர்தலில் தர்மபுரியில் தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியதே நம் சாதனைதான். அவர்கள் மீண்டு எழ இனி 15 ஆண்டுகள் ஆகும்.
இனி அய்யா என்ன சொன்னாலும் நிச்சயம் அதை ஏற்போம்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
முன்னதாக பேசிய காடுவெட்டி குரு, தருமபுரியில் நமக்குக் கிடைத்த வெற்றி, கூட்டணியால் கிடைத்த வெற்றியல்ல. நம் சமூகத்து மக்களால் கிடைத்த வெற்றி. தருமபுரி மக்களின் காலைத் தொட்டு நாம் வணங்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் கூட்டணி அமைவதாக இருந்தாலும் சரி, வேட்பாளர்கள் அறிவிப்பதாக இருந்தாலும் சரி, ராமதாஸின் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும். அதற்கு மேல் யாரும் அந்த முடிவில் தலையிடக் கூடாது.
வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. ராமதாஸ் சொல்வதை ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான் முக்கியம். யாருக்கும் அடிபணியாத துணிச்சல் மிக்க தலைவரை, கடந்த தேர்தலில் நாம் வருத்தப்பட வைத்துவிட்டோம். அதற்காக அவரிடம் நாம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற தவற்றை நாம் செய்யக் கூடாது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications