மேல்மருவத்தூர் கோவிலில் அன்புமணி வழிபாடு: அனல் பிரச்சாரத்திற்கு நடுவே ஆன்மீகம்...
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார்.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்தவாரம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 தினங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பிரச்சாரம் அனலை கிளப்பி வருகிறது. வெற்றி உறுதி என்று நம்பினாலும், ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளும் பீதியை கிளப்பி வருகின்றன.
பணத்தை கொடுத்தாவது நம்மை தோற்கடித்து விடுவார்கள் என்று அச்சப்படும் அன்புமணி, அதிமுக, திமுக மீது புகார் கூறி வருவதோடு, தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகிறார்.

ஆதிபராசக்தி கோவில்
அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு நடுவே ஆன்மீக பயணமும் செய்து வருகிறார் அன்புமணி. காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார் அன்புமணி.

கருவறைக்குள் பூஜை
ஆதிபராசக்தி ஆலயத்தின் கருவறைக்குள் அன்னை ஆதிபராசக்திக்கு தீபாராதனை காட்டி வழிபட்டதோடு தேர்தல் வெற்றிக்காக மனமுருகி வேண்டிக்கொண்டார் அன்புமணி.

ஸ்டாலின்
கடந்த ஏப்ரல் மாதம் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மேல்மருவத்தூர் சென்ற மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றார். ஆதி பராசக்தி அன்னையை 108 முறை போற்றி அர்ச்சனை செய்து வழிபட்டார், அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ராமதாஸ் - அடிகளார் சந்திப்பு
கடந்த மார்ச் 3ம் தேதி பங்காரு அடிகளாரின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடிகளாரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறி பொன்னாடை போர்த்தி பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்!

ஆன்மீகத்தை நாடும் அரசியல்வாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு அடிகளாரை விமர்ச்சித்த டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு, பங்காரு அடிகளார் மூலம் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறினார். இதற்கு வன்னியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின்னர் அடிகளாருடன் நேசம் காட்டி வருகிறார் ராமதாஸ்.

வெற்றிக்காக வழிபாடு
ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு செவ்வாடை பக்தர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். பங்காரு அடிகளாரிடம் நெருக்கம் காட்டுவதன் மூலம் செவ்வாடை பக்தர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றனர் அரசியல் தலைவர்கள். ஆதிபராசக்தியின் அருள் யாருக்கு கிடைக்குமோ?.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications