இந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான்... இன்றும் சாட்சியமாக இருக்கும் குஜராத்தின் கட்ச்-பூஜ்!
இந்தியா ஆதித் தமிழர்களான நாகர்களின் தேசமாகவே இருந்தது.
Recommended Video

சென்னை: இமயம் முதல் இலங்கை வரையிலான நிலப்பரப்பு தமிழர்களின் தாயகமாக இருந்தது; மொழிதிரிபுகளால் இன்று தமிழகம் என்ற சிறு பகுதிக்குள் வாழ்கின்றனர். இதற்கான சாட்சியமாக இருப்பவை குஜராத்தின் கட்ச்-பூஜ் பகுதிகளும் இன்றளவும் மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா மலைகளில் வாழும் திராவிடப் பழங்குடிகளும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா தமிழர்களின் நிலம் என்று பேசியுள்ளார். இது பலருடைய ஆர்வத்தையும் கிளறியுள்ளது. அவர் கூறுவது உண்மைதான். இந்தியா தமிழ் பேசிய நாகர்களின் தேசமாகவே அன்று இருந்தது.
குஜராத்தின் கட்ச் பகுதியின் லக்பதக் கோட்டைதான் ஒருகாலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக திகழ்ந்தது. இங்கு ஓடிய சிந்து நதியின் தடங்கள் இன்றளவும் காண முடியும்.

லக்பதக் கோட்டை
1819-ம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கத்தினால் சிந்து நதி இடம் எப்படி இடம் மாறியது என்பதை விவரிக்கும் வரைபடத்தை இன்றளவும் இந்த கோட்டையின் முகப்பில் இந்திய தொல்லியல்துறை வைத்துள்ளதை நாம் காண முடியும். பெருமணற்பரப்பாக கைவிடப்பட்ட இடமாக லக்பதக் கோட்டை பகுதி இப்போதும் இருக்கிறது. இது எப்படி நாகர்களின் தேசமாகிறது? ஆதி தமிழர்களுக்கும் குஜராத்தின் கட்ச் பகுதிக்கும் என்ன தொடர்பு?

குடியேற்றப் பகுதி
கட்ச் மாவட்டத்தின் தலைநகரம் பூஜ். இதன் எழுதப்படும் வரலாறுகள் அத்தனையுமே ஒருகாலத்தில் இங்கே நாகர்கள் ஆண்டார்கள் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. பூஜ் என்பது கட்ச் மொழியில் நாகம். பூஜ் என்பது மலைப் பகுதியை குறிக்கிறது. இன்றும் நாகவழிபாடு என்பது பூஜ் நகரங்களில் காண முடியும். நான் அங்கே பயணித்த போது மாவட்ட ஆட்சியராக இருந்த தென்னரசு அவர்களின் உதவியுடன் எனக்கு வழிகாட்டியாக வந்த முன்னாள் ராணுவ வீரர்தான் இத்தகவலை பகிர்ந்து கொண்டார். கட்ச் பகுதி என்பது பிற இன மக்களின் குடியேற்றப்பகுதியாகவே இன்றும் இருந்து வருகிறது. இன்றும் ஜெர்மானிய பழங்குடிகளையும் இங்கே காண முடியும்.

சிந்து சமவெளி நகரம்
இவையெல்லாம் ஆதாரங்களா? இது நாகர்கள் எனும் தமிழ் மூதாதையர் பூமி; சிந்து சமவெளி நகர நாகரீகம் இங்கேயும் இருந்தது என்பதற்காக உயிருடன் இருக்கிறது தோலவீர. பூஜ் நகரில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது தோலவீர. இந்திய தொல்லியல் துறையால் சிந்து சமவெளி சான்றுகளாக இருப்பவற்றில் தோலவீரவும் ஒன்று. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருக்கும் லோதலும் ஒன்று. தோலவீரவானது வெள்ளை பாலைவனம் எனப்படும் கட்ச் சதுப்பு நிலத்துடன் இணைந்திருக்கிறது. இந்த சதுப்பு நிலத்தின் ஒருபகுதி பாகிஸ்தானிலும் உள்ளது.

திராவிடப் பழங்குடிகள்
குஜராத் அருகே உள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் ஆதி பழங்குடிகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து இன்றும் ஒடிஷாவில் வாழ்கின்றனர். ஒடிஷாவில் வாழும் பழங்குடிகளை வரலாற்று ஆய்வாளர்கள் 'திராவிடப் பழங்குடிகள்' என்றே குறிப்பிடுகின்றனர்.

இடப்பெயர்வு கருத்தியல்
ஒடிஷா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருப்பவர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர்தான் சிந்துசமவெளியில் ஊர்ப் பெயர்கள் தமிழில் இருப்பதை வெளிக்கொணர்ந்தவர். இவர்தமது ஆய்வுகள் மூலமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியாவில் தமிழ்ப் பெயர்கள் உள்ள நகரங்களை வெளியிட்டிருக்கிறார். ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் இப்படியாக ஒன்றை குறிப்பிடுகிறார், "தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் - ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா - ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது என்கிறார்.

இந்தியாவின் ஆதிகுடிகள்
இதேபோல் இலங்கையின் வரலாற்றில் பூர்வகுடிகள் நாகர்கள் என்பதும் வரலாறு. இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழ்ந்த நாகர்கள்தான் ஆதித் தமிழர்கள். ஆதித் தமிழ்தான் பிறமொழி கலப்புகளால் சிதைந்து சிதைந்து இந்திய மொழிகளாக விரிந்து கிடக்கிறது. ஆதி தமிழரின் எஞ்சிய நிலப்பரப்பாக தமிழகம் மட்டும் இருக்கிறது என்பது வரலாற்று உண்மையே.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications