அம்மா கேண்டீனில் புளியோதரை சாப்பிட்ட ஆந்திர அமைச்சர்: தரம், சுவை பிரமாதம் என பாராட்டு
சென்னை: சென்னை அம்மா உணவகத்தில், சாப்பிட்டு பார்த்த ஆந்திர பொது வினியோகத்துறை அமைச்சர் பரிட்லா சுனிதா, ஆந்திராவிலும் அதுபோன்ற உணவகங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் நகர பகுதிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை கேண்டீன்களை அரசு திறந்துள்ளது.

பொங்கல், புளியோதரை
இதில் பொங்கல், புளியோதரை, இட்லி, சப்பாத்தி, எலுமிச்சை சாதம், தயிர்சாதம் என பல வகை உணவு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பெங்களூரிலும் மலிவு விலை கேண்டீன்
அம்மா உணவகத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அதிகாரிகள் பலர் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். கர்நாடகாவிலும் இதுபோன்ற மலிவு விலை உணவகத்தை பெங்களூரில் திறக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

ஆந்திர அமைச்சர் ஆய்வு
இந்நிலையில், ஆந்திர உணவு வழங்கல் துறை அமைச்சர் பரிட்டாலா சுனிதா நேற்று, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகத்துக்கு வருகை தந்தார். அங்கு சுத்தம் பராமரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

புளியோதரை புசித்த அமைச்சர்
இதன்பிறகு புளியோதரை, பொங்கல் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்து ருசியையும் தெரிந்துகொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம், வாடிக்கையாளர்களின் வரவேற்பு குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த பொதுமக்களிடமும் தரம் மற்றும் சுவை குறித்து திருப்தியடைந்துள்ளீர்களா என்று கேட்டு அறிந்துகொண்டார்.

ஆந்திராவிலும் அம்மா ஸ்டைல் உணவகம்
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பரிட்டலா சுனிதா, அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "அம்மா' உணவகத்தில் அதிகளவில் கூட்டம் வருவதைப் பார்த்து வியப்படைவதாகவும், இது போன்ற மலிவு விலை உணவகங்களை ஆந்திரத்திலும் அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பரிந்துரைக்க போவதாகவும் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications