அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு.. 10 பேர் மீது வழக்கு பதிவு
அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேட்டில் தொடர்புடைய 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் தொடர்புடைய 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
தற்போது அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள்.

2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து இருக்கிறது. அப்போது அண்ணா பல்கலையில் துணை வேந்தர் யாரும் இல்லாததை பயன்படுத்தி முறைகேடு நடந்து இருக்கிறது. சுமார் 10 பேராசிரியர்கள் வரை இந்த முறைகேட்டை செய்து உள்ளனர்.
தேர்வுக்கான கட்டுப்பாட்டாளர் ஜி வி உமா தலைமையில் இந்த மொத்த முறைகேடும் நடந்து இருக்கிறது. இந்த மோசடியில் தற்போது போலீஸ் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது. எப்படி முறைகேடு நடந்தது என்று விசாரித்து வருகிறது.
தேர்வில் தோல்வி அடைந்த பல மாணவர்களிடம் லஞ்சம் வாங்கி, அவர்களை வெற்றிபெற வைத்து இருக்கிறார்கள். தற்போது பேராசிரியர் உமா உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் இதுகுறித்து விரைவில் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications