முதலியார், பிள்ளைமார் ஆதரவு யாருக்கு? - அண்ணா வஉசி கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தின் ஆதரவு யாருக்கு என்பதை அண்ணா - வஉசி கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.
தங்கள் சமுதாயத்தினரின் வளர்ச்சியை முன்னிறுத்தி, 2016 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அதரவு கொடுப்பது என்பது குறித்து ஆராய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிஞர் அண்ணா வஉசி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் ஓட்டலில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தலில் ஆதரவு தருவது தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன், "தமிழகம் முழுதும் அனைத்து முதலியார், பிள்ளைமார், வேளாளர், செங்குந்தர் சமூகத்தினர் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். தனித்தனி சங்கங்கள், அமைப்புக்களாக இருந்தவர்களை ஒருங்கிணைந்து அறிஞர் அண்ணா வ.உ.சி., கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டமைப்பின் சார்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர் பேசும்போது, ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கிடும்போது, 20 சதவீத வாக்காளர்கள் இந்த சமுதாயத்தில் உள்ளனர். எனவே, அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் விதமாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த சமுதாயத்தினரின் பிரதிநிதிகள் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அதற்காக, எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க ஐந்து பேர் கொண்ட அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சமுதாயத்தின் அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர்.

இந்த கூட்டத்தில், தமிழகம், புதுச்சேரியில் இருந்து 42 பிரிவுகளின் பிரதிநிதிகள், கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஜி. விஸ்வநாதன், கௌரவத் தலைவர்கள் ஜெயபால் மற்றும் இயக்குநர் கே.ராஜன், தலைவர் கே.பி.கே. செல்வராஜ், பொதுச்செயலாளர் செவாலியர் அருணாசலம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications