வாங்கண்ணா.. வாங்கண்ணா.. அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை பார்த்ததும் அண்ணாமலை கொடுத்த மரியாதை!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை திருமண வீட்டில் பார்த்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வாங்கண்ணா.. வாங்கண்ணா.. என வரவேற்று அவரிடம் நலம் விசாரித்தார்.

திருப்பூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தான் அமைச்சர் சாமிநாதனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பர நலம் விசாரித்தனர்.

Annamalai, who saw Minister Vellakoil Saminathan at wedding, greeted him and inquired about his health

ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து அதிமுக பேசுகிறதோ இல்லையோ, முதல் ஆளாக பாஜக விமர்சித்து வருகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரை போல் அரசை தினம்தோறும் விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. திமுக அமைச்சர்களின் சொத்து விவர பட்டியல்களை எல்லாம் ஆளுநரிடம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல இப்போது அவர் மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கூட அமைச்சர்களை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற தொழிலதிபர் இல்ல மண விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை, மணமக்களை வாழ்த்திவிட்டு சில நிமிடங்கள் அங்கிருந்தவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திருமண விழாவுக்கு வந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், அண்ணாமலையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாற்காலியில் கட்சியினருடன் அமர்ந்திருந்த அண்ணாமலை அமைச்சர் சாமிநாதனை பார்த்ததும் எழுந்து நின்று கையை பிடித்து வாங்கண்ணா.. வாங்கண்ணா.. என வரவேற்றார்.

ஓரிரு நிமிடங்கள் இருவரும் பரஸ்பர நலம் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து மேடைக்கு மணமக்களை வாழ்த்த செல்வதாக கூறிவிட்டு அண்ணாமலையிடமிருந்து நகர்ந்து சென்றார் அமைச்சர் சாமிநாதன். இதனிடையே அண்ணாமலையும் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுவிட்டார். திருமண விழாவில் அண்ணாமலை இருக்கும் தகவல் தெரிந்திருந்தால் அமைச்சர் சாமிநாதன் சற்று தாமதமாக சென்று கூட மணமக்களை வாழ்த்தியிருப்பார் என்றும் எதிர்பாராத நிகழ்வு எனவும் கூறுகிறது அமைச்சர் தரப்பு.

திமுக அமைச்சர்கள் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் அண்ணாமலை, அமைச்சர் சாமிநாதனுக்கு எழுந்து நின்று வரவேற்பு கொடுத்து வணக்கம் வைத்த நிகழ்வு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+