எங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவியுங்கள்... ஏர்செல் நிறுவனம் திடுக்கிடும் மனு!
தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரிக்கை வைத்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: தங்கள் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரிக்கை வைத்து இருக்கிறது. இழப்பும் கடனும் அதிகமாக இருப்பதால் இப்படி அறிவிக்கும்படி ஏர்செல் நிறுவனம் கோரியுள்ளது.
ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை. இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருந்தது. தற்போது ஏர்செல் இதற்கு தற்காலிக செயல்பட்டு வருகிறது.

எடுக்கவில்லை
கடந்த வாரம் இந்தியா முழுக்க ஏர்செல் சிக்னல் வழங்கிய 8 ஆயிரம் டவர்கள் வரை தற்போது செயல் இழந்து இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் அனைத்து டவர்களும் செயல் இழந்து உள்ளது. அவர்களின் இணையதளமும் செயலிழந்துள்ளது.

மீண்டது
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டவர் மீண்டும் செயல்பட தொடங்கியது. மேலும் இன்னும் 15 வருடங்களுக்கு கண்டிப்பாக செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

மீண்டும் தகவல்
இந்த நிலையில் இன்று மாலையில் இருந்து மீண்டும் டவர் பிரச்சனை வரும் என்று கூறப்பட்டது. டவர் நிறுவனத்துடன் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் செயல்படாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இன்றும் மாலை 6 மணிக்கு மேல் இந்த பிரச்சனை ஏற்படும்.

கோரிக்கை
தற்போது தங்கள் நிறுவனத்தை திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க வேண்டும் என ஏர்செல் கோரிக்கை வைத்து இருக்கிறது. தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் மனு கொடுத்து இருக்கிறது. இதில் விரைவில் முடிவெடுக்கப்படும்.

கடன்
டவர் பிரச்சனை காரணமாக அவர்களுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரூ.15,500 கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதால் திவால் என அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனத்திற்கு மாற அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications