கூவத்தூர் மட்டுமல்ல பூந்தண்டலம் பண்ணை வீட்டிலும் எம்எல்ஏக்கள் சிறை- அதிகாரிகள் விசாரணை
கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து செய்யாறு வட்டாட்சியர்
சென்னை: கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்கக்கோரியும், அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் உறவினர்கள் மற்றும் அனுதாபிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், விடுதிகளில் உள்ள எம்எல்ஏக்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
கூவத்தூரில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இன்று செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி, மாமல்லபுரம் டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் 4 மணிநேரம் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அங்கு ஏழு அமைச்சர்கள் உள்பட 94 எம்எல்ஏக்கள் இருந்தனர். அப்போது, உணவு ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாகவும், யாரும் கடத்தப்படவில்லை என எம்எல்ஏக்கள் தெரிவித்ததாக தாசில்தார் கூறினார்.
ரிசார்ட்டில் வசதி சரியில்லை என்று கூறிய சில எம்எல்ஏக்கள் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் பண்ணை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், டி.எஸ்.பி எட்வர்டு தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது 13ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications