தமிழக அரசின் ரூ.10000 கோடி ஊழல்: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புகைப்படத்துடன் பேனர் வைத்த தனியார் அமைப்பு
சென்னை: தமிழக அரசின் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல், சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற பேனர் சென்னை புறநகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேனரில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காதுகுத்து, கல்யாணம், என நல்லது கெட்டது எதுவென்றாலும் பேனர் வைப்பது இன்றைக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. ஊழல் செய்த அதிகாரிகளை பேனர் வைத்து வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர் சிலர். இன்றைக்கு வைக்கப்பட்ட ஒருபேனரும் ஒரு பரபரப்பு ரகத்தை சேர்ந்த்துதான்
சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் எதிரில் இன்று காலையில் பிரம்மாண்ட பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘ தமிழக அரசின் ரூ.10000 கோடி ஊழல் - சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்' என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

இந்த பேனரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன், ராமமோகன் ராவ் ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹன்ஸ்ராஜ்வர்மா, அதுல் ஆனந்த், குமரகுருபரன், சபீதா, உதயசந்திரன், சவுண்டையா, வெங்டேசன், கார்த்திக் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் புகைப்படங்களும் பேனரில் இடம் பெற்றுள்ளது.
இதே போன்ற ஒரு பேனர் தாம்பரம் - இரும்புலியூர் தேசிய நெடுஞ்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தும் செல்போன்களில் புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். இந்த பேனரை ஒரு தனியார் அமைப்பு ஒன்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் பொதுப்பணித்துறையில் லஞ்சம் வாங்கிய ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரூ.10000 கோடி ஊழல் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற தலைப்பில் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications