இளைஞர் அணியை மீட்க வரும் 'கும்கியே'… மதுரையில் இன்னொரு போஸ்டர் ரெடி
மதுரை: கடந்த ஜனவரியில் அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட கலகப் போஸ்டரினால் திமுகவில் இன்னமும் சர்ச்சை ஓயவில்லை. இந்த நிலையில் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்தநாளை கொண்டாடத் தயாராகும் அவரது ஆதரவாளர்கள் மற்றொரு போஸ்டரை தயார் செய்து வைத்திருக்கிறார்களாம். அதுதான் ‘ இளைஞர் அணியை மீட்க வரும் கும்கியே!' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்.
உள்ளாட்சி இடைத் தேர்தலுக்குப் பின்னர் மு.க.அழகிரி திமுகவில் இணையப் போவது உறுதியாக உள்ள நிலையில், துரை தயாநிதியும் முழு நேர அரசியலில் இறங்க தயாராகி வருகிறாராம்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக மதுரையில் பல்வேறு வேலைகள் நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் விஜயகாந்தினை சந்தித்து நலம் விசாரித்த நெப்போலியன் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அழகிரியின் ஆதரவாளர்களுக்கு தகவல் சொல்லி அவர்களை குஷிப்படுத்தியுள்ளாராம்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இம்மாதம் 27ஆம்நாள் துரை தயாநிதியின் பிறந்தநாள் வருகிறது. இதனை மதுரையில் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளாராம். இதற்கு முன்பாகவே தனது தாத்தா கருணாநிதியை சந்தித்து ஆசி பெறப் போகிறாராம் துரை தயாநிதி.

இளைஞரணி இலக்கு
திமுக இளைஞரணியை நோக்கி காய் நகர்த்த முடிவு செய்துள்ளாராம் துரை தயாநிதி. கட்சியின் பொருளாளராக இருக்கும் ஸ்டாலின் இளைஞரணித் தலைவர் பதவியைக் கைவிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை கைப்பற்ற வேண்டும் என்பது துரை தயாநிதியின் திட்டம் என்கின்றனர்.

போஸ்டர் ரெடி
இதை புரிந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், ‘இளைஞரணியை மீட்க வரும் கும்கியே' என்று தலைப்பிட்டு போஸ்டரை தயார் செய்து வைத்துள்ளனராம்.

ஒட்டிய போஸ்டரால் வந்த வினை
ஏற்கனவே அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்தான் கழகத்தில் கலகக்குரலை ஒலிக்கச் செய்து அழகிரியை கட்சியை விட்டே நீக்க வைத்தது. இப்போது கட்சியில் மீண்டும் இணையப் போகும் நேரத்தில் மற்றொரு போஸ்டரை தயார் செய்து வைத்துள்ளனர் மதுரை திமுகவினர்.

உதயநிதியின் கவனம்
இது ஒருபுறம் இருக்க முக்கிய பங்காளியான உதயநிதியின் கவனம் எல்லாம் சினிமாவிலேயே இருக்கிறது. அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லையாம். அதே சமயம் ஸ்டாலினின் நண்பரான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ்தான் இளைஞர் அணித்தலைவர் பதவிக்கு தயாராகி வருகிறாராம்.அவர் உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறாராம்.

பேரனுக்கே பதவி
இளைஞர் அணித்தலைவர் பதவி யாருக்கு என்ற போட்டி வரும் பட்சத்தில் தனது பேரன் துரை தயாநிதிக்கே தலைவப் கருணாநிதி டிக் அடிப்பார் என்கின்றனர் மதுரை திமுகவினர். அப்போதுதானே தனது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே கட்சி இருக்கும் என்பது கருணாநிதியின் நம்பிக்கையாம்.
கழகத்தில் ஒலிக்கப் போகும் கலகக்குரல் இம்முறை நன்மையைத் தருமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications