கறுப்பு பண எதிர்ப்பு தினம் : நவ.8ஆம் தேதி மத்திய அரசு கொண்டாடுகிறது
பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கருப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய அரசு கொண்டாட திட்டமிட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக
சென்னை: எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கருப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய அரசு கொண்டாட திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகினர். வங்கி வாசல்களில் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

கருப்பு பணம், கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றை ஒழிக்கும் நோக்கில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ஒரே நாள் இரவில் செல்லாததாகி விட்டது.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்தன. தேசிய அளவில் ஒன்றிணைந்து நவம்பர் 8ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறினார்.
தமிழகத்திலும் திமுக கறுப்பு சட்டை அணிந்து போராட அழைப்பு விடுத்துள்ளது. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளை கறுப்பு தினமாக அனுசரித்து மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு பதிலடி தரும் விதமாக நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நவம்பர் 8ஆம் தேதியன்று கறுப்பு பண ஒழிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications