மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்துள்ளனர்... நடிகர் ராகவா லாரன்ஸ் பகீர்
மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்து போராட்டத்தை திசை திருப்பியுள்ளனர் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வீடு திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு யாரோ கலந்து விட்டார்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டார்.
மேலும், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த நடிகர் லாரன்ஸ் அளித்த பேட்டியில், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் 7 நாட்களாக போராடினார்கள் என்றும், ஆனால் மாணவர்களோடு தொடர்பு இல்லாத சிலர் வேறு சில கோரிக்கைகளை போராட்டத்தில் திணித்துள்ளனர் என்று லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பித்ததுள்ள நிலையில், நாம் பெற்ற வெற்றியை கொண்டாட வேண்டிய நேரம் இது என்றும் இளைஞர்களிடம் லாரன்ஸ் எடுத்துக் கூறினார்.
மெரினாவில் இருந்து இளைஞர்கள், மாணவர்களை கலைந்து செல்லும் படி கேட்டுக் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications