இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா.. ஸ்டெர்லைட் மீது பாயும் பாத்திமா பாபு!
Recommended Video

தூத்துக்குடி: ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்த, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
பேராசிரியை பாத்திமா பாபு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் பேராசிரியை பாத்திமா பாபு, ஸ்டெலைட் போராட்டத்தில் பங்கேற்ற ஆண் நண்பர் தெர்மல் ராஜா என்பவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காட்சி ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாத்திமாவும், தெர்மல் ராஜாவும் ஒன்றாக இருந்த போது ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை பாத்திமா பாபு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை சந்தித்து நேற்று இரவு புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முடக்குவதே அந்நிறுவனத்தின் குறிக்கோள். அது ஒரு போதும் நிறைவேறாது. அதற்காக பல உத்திகளை கையாண்டு உள்ளது. அதில் இன்று உச்சகட்டமாக மிகவும் கேவலமான ஒரு உத்தியை கையாண்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம். அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். மனுவில் யாரையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் அளிக்கவில்லை.
பரவிவரும் வீடியோவினால் எங்கள் போராட்டத்தில் ஒரு காலமும் பின்னடைவு ஏற்படாது. இது தொடர்பாக விளக்க அறிக்கையை நாங்கள் விரைவில் வெளியிடுவோம். புகார் மீதான சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications