ஜெ.வை அனுமதித்ததும் சிசிடிவி கேமராவை ஆப் பண்ணச் சொன்னது இவர்கள்தான்.. பரபர தகவல்
ஜெயலலிதாவை அனுமதித்த உடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவை அனுமதித்த உடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
[நான் முதல்வராகி விடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டார் ஓபிஎஸ்.. விரட்டும் தங்க தமிழ்ச்செல்வன்!]

கேமராக்கள் இல்லை
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் தெரிவித்தது அப்பல்லோ நிர்வாகம்.

வீடியோ பதிவுகள்
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

அப்பல்லோவுக்கு உத்தரவு
இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனுக்கு கடிதம் வாயிலாக கடந்த மாதம் பதில் அளித்தது. அதில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை கமிஷன் உத்தரவிட்டது.

நிறுத்த சொன்னது யார்?
இந்நிலையில், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் நேற்று தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால்தான் நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications