நான் முதல்வராகி விடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டார் ஓபிஎஸ்.. விரட்டும் தங்க தமிழ்ச்செல்வன்!
நான் முதல்வராகி விடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டது உண்மை என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நான் முதல்வராகி விடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டது உண்மை என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிடிவி தினகரனை சந்தித்தார் என்று கூறினார்.
இதனை உறுதிப்படுத்திய டிடிவி தினகரன் ஓபிஎஸ் தன்னை சந்தித்தது உண்மைதான் என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு தான் முதல்வராக துடித்தார் என்றும் டிடிவி தினகரன் சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார்.
[ஜெ.வை அனுமதித்ததுடன் சிசிடிவி காட்சிகளை நிறுத்த சொன்னது யார்? பரபரப்பு தகவல்]

ஓபிஎஸ் பதில்
தினகரனின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

மனம் திருந்தியிருப்பார்
அப்போது டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று கூறிய அவர், டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன். தினகரன் மனம் திருந்தி வந்திருப்பார் என நினைத்தேன்.

ஓபிஎஸ் விளக்கம்
ஆனால் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என தினகரன் செய்த சதிதான் இது என்று கூறி விளக்கமளித்தார். இந்நிலையில் ஓபிஎஸின் விளக்கம் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் முதல்வராகிவிடுவேன்
அதாவது டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாக நான் கூறியது பொய் என்றால் வழக்கு தொடரட்டும். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது உண்மை .
நான் முதல்வராகிவிடுவேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஓபிஎஸ் கூறியது உண்மை.

சந்தித்ததே தவறு
டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததில் சுயநலம் இருக்கிறது. எங்கள் மீது குற்றச்சாட்டை பரப்பி வந்த ஓபிஎஸ் தினகரனை சந்தித்ததே தவறு. இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications