ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மைதான்.. ஆனா நாங்க எடுக்கலை.. அப்பல்லோ நிர்வாகம்
ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக வெளியான உண்மைதான் என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை எடுத்தது தொடர்பான வீடியோவை தினகரன் அணி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட நிலையில் அது உண்மையான வீடியோதான் என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போது
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்தான், அவர் நலமாக இருக்கிறார், விரும்பும்போது வீடு திரும்பலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் தனது விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், இதை கூறினாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மறைத்துவிட்டோம் என்றும் அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் ஜூஸ் குடிக்கும் வீடியோவை வெற்றி வேல் வெளியிட்டுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் வெளியாகும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்து கொண்டு ஒரு கையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவின் உண்மைதன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிர்வாகம் கூறுகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஜெயலலிதா சிகிச்சை வீடியோதான், ஆனால் அதை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் எடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications