பாரா ஒலிம்பிக்.. பதக்கம் வென்று அசத்திய மாரியப்பன் உள்பட 4 பேருக்கு பாராட்டு விழா
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை: பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உள்பட 4 பேருக்கு சென்னையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடந்தது.
மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் 19 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று அசத்தியது.

தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். வட்டு எறிதலில் தேவேந்திர ஜாஜாரியா (ராஜஸ்தான்) தங்கம் வென்றார். குண்டு எறிதலில் தீபா மாலிக் (அரியானா) வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுலில் வருண்சிங் (உத்தரபிரதேசம்) வெண்கல பதக்கமும் பெற்றனர். பதக்கம் வென்ற வீரர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. மத்திய அரசு சார்பில் வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு சென்னையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடந்தது. ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாரியப்பனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான கார் சாவி அவரிடம் கொடுக்கப்பட்டது. தேவேந்திர ஜாஜாரியா, தீபா மாலிக், வருண்சிங் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications