தமிழா... தமிழா.. கண்கள் கலங்காதே.. பாடலுடன் உண்ணாவிரதத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்து ஆஸ்கர் தமிழன் ஏஆர்.ரஹ்மான் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்து ஆஸ்கர் தமிழன் ஏஆர்.ரஹ்மான் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை உண்ணாவிரதம் இருந்த அவர், பழச்சாறு குடித்தும் தமிழா... தமிழா.. பாடலை பாடியும் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டு மொத்த தமிழகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டத்தைக் கண்டு வியந்து போன ஏஆர் ரஹ்மான் தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 4.30 மணிக்கு தனது வீட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கிய ஏஆர்.ரஹ்மான் மாலை 6 மணிக்கு பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். 6 மணியளவில் பெரிஸ்கோப் இணையத்தில் லைவ்வாக பேசினார்.
அப்போது இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. நல்ல முடிவு வரும் என நம்புகிறேன் என்று பேசினார். மேலும் தமிழா.. தமிழா கண்கள் கலங்காதே" விடியும் விடியும் உள்ளம் மயங்காதே.. என்வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா.. என்நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா என்ற பாடலையும் பாடி ஏஆர்.ரஹ்மான் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications