Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரு பக்க கடலிலும் புயல்கள்.. அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வலுவடையும் லூபன் புயல்: வானிலை ஆய்வு மையம்

    சென்னை: அரபிக் கடல் மற்றும் வங்க கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி நகர்ந்து வருகிறது என்றும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:

    [ எமர்ஜென்ஸி காலத்தைபோல் பத்திரிகையாளர்களை கைது செய்வது தமிழக அரசுக்கு அழகல்ல:காதர் மொகிதீன் கண்டனம்! ]

     ஏமனை நோக்கி நகர்கிறது

    ஏமனை நோக்கி நகர்கிறது

    மேற்கு மத்திய அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ந்தேதி புயலாக மாறியது. லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.

     புயலாக மாறும்

    புயலாக மாறும்

    அதேபோல, வங்கக் கடலில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது ஒரிசாவுக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படிவலுப்பெறும் பட்சத்தில் ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையை நோக்கி நகரும்.

     மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 11-ஆம் தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

     காற்று பலமாக வீசும்

    காற்று பலமாக வீசும்

    மத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும். இந்த காற்றின் வேகம் நாளை மற்றும் நாளை மறுநாள் 80 அல்லது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்புள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+