சங்ங்ங்கட்டமா போச்சு.. ரயிலில் ஏசி கோச் பாத்ரூம் கிட்ட.. டிடிஆரே திணறிட்டாரே.. அரக்கோணத்தில் யாருங்க
அரக்கோணம்: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் மட்டுமல்ல, சென்னை ரயிலிலும் பெரும பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் இந்த இளைஞர்? யார் இவர்?
சென்னை சென்ட்ரலிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கம்போல் நேற்றைய தினம் கிளம்பியது.. இந்த ரயிலில், AC பெட்டியின் பாத்ரூம் பக்கத்திலேயே இளைஞர் ஒருவர் படுத்திருந்தார்...

சென்ட்ரல்: ரயில் ஓடிக்கொண்டேயிருந்ததால், இந்த இளைஞரும், பாத்ரூமுக்கு பக்கத்திலேயே அங்குமிங்குமாக உருண்டு கொண்டிருந்ததார். நடுவழியிலேயே படுத்திருந்தால், பயணிகள் யாராலும் பாத்ரூமுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.. அவரை தாண்டி செல்ல முடியாத அளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக படுத்திருந்தார்.
இதனால், அங்கிருந்த பயணிகள், இளைஞரை எழுப்ப முயன்றார்கள்.. ஆனால் அவரால் எழ முடியவில்லை.. கண் திறந்தும் பார்க்காமல் படுத்துக் கொண்டேயிருந்தார்.. இதற்கு பிறகு, டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார்..
அப்போது பயணிகள் அனைவரும் சேர்ந்து, அந்த இளைஞர் குறித்து புகார் சொன்னார்கள்.. உடனே டிக்கெட் பரிசோதகரும், இளைஞரை எழுப்ப முயன்றார். அப்போதுதான், இளைஞர் போதையில் படுத்திருப்பது தெரியவந்தது.
டிக்கெட் பரிசோதகர்: இதையடுத்து டிக்கெட் பரிசோதகர், அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்... அதற்குள் ரயில் அரக்கோணம் வந்துவிட்டது..
அங்கே ஸ்டேஷனில் தயாராக நின்றிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சம்பந்தப்பட்ட கம்பார்ட்மென்ட்டில் ஏறி, பாத்ரூம் அருகே படுத்திருந்த இளைஞரை, குண்டுகட்டாக இழுத்துசென்று பிளாட்பாரத்தில் போட்டனர்.. அதற்கு பிறகே, பயணிகள் நிம்மதியானார்கள்..
யார் இவர்: ஆனால், அரக்கோணம் ஸ்டேஷனில் தூக்கி போட்டும்கூட, அந்த இளைஞரால் கண்களை திறக்க முடியவில்லை.. போதையிலேயே பிளாட்பாரத்திலும் உருண்டு கொண்டிருந்தார்.. அந்த நபர் யார்? எங்கிருந்து வருகிறார்? எங்கே போகிறார்? என்றே தெரியவில்லை.. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.. ஆனாலும், டிக்கெட் பரிசோதகர் முதல் பயணிகள் வரை ஒட்டுமொத்த பேருக்கும் சென்னை டூ அரக்கோணம்வரை டென்ஷன் தந்துவிட்டார் இந்த "குடிமகன்"...!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications