For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரணி தொகுதி அதிமுக செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: ஜெ. அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆரணி தொகுதி செயலாளரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இது தொடர்பாக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க. கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.வுக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஆரணி சட்டமன்ற தொகுதி செயலாளர் பையூர் ஏ.சந்தானம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

அ.தி.மு.க.வினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
Arani ADMK secretary was expelled from the party by chief minister Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X