Arani exit poll 2024: ஆரணி மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? வெல்ல போவது யார்? தந்தி டிவி கணிப்பு
ஆரணி: ஆரணி லோக்சபா தொகுதியில் எந்த கட்சி வெல்லும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறையும் அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தின் பட்டு நகரம் என பெயர் பெற்றது ஆரணி. இங்கு அரிசி ஆலைகளும் அதிக அளவில் உள்ளது. ஆரணியம் அதாவது காடாக இருந்த பகுதி பிறகு ஆரணி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நகரை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இங்கு விவசாயமும் நெசவும்தான் பிரதான தொழிலாகும். ஆரணியில் உள்ள பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக மகாத்மா காந்தி இரு முறை ஆரணிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. ஆரணியில் வரலாற்று சிறப்பு மிக்க போர்கள் நடந்துள்ளன. ஆரணியில் இருந்து சில கி.மீ. தூரத்தில் உள்ள எஸ்.வி.நகரத்தில் விஜயநகர பேரரசின் கோட்டை உள்ளது.
இந்த தொகுதியில் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் திமுகவை சேர்ந்த தரணிவேந்தன், அதிமுகவை சேர்ந்த கஜேந்திரன், பாமகவை சேர்ந்த கணேஷ்குார், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. அந்த வகையில் தந்தி டிவி கணிப்புகளில் ஆரணி லோக்சபா தொகுதியில் வேட்பாளர் தரணி வேந்தனுக்கு 41 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
அதிமுகவுக்கு 33 சதவீதம் வாக்குகளும் பாமகவுக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைக்கும். எனவே ஆரணி தொகுதியில் திமுக வெல்ல வாய்ப்புள்ளது என தந்தி டிவி கணித்துள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத், எம்பியாக இருந்த நிலையில் அவர் தொகுதிக்காக எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது போல் ஆரணியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அது இழுபறியிலேயே இருக்கிறது.
ஆரணி தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,90,440; ஆண்கள்; 7,31,824, பெண்கள் - 7,58,507: 3-ம் பாலினத்தவர்- 109.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728
சுப்பிரமணியன் (அதிமுக) 2,89,898
மோகனம் (தேமுதிக) 1,05,729
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஏழுமலை (அதிமுக)- 5,02,721
சிவானந்தம் (திமுக) 2,58,877
ஏகே மூர்த்தி (பாமக) 2,53,332
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 27,717
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) 6,17,760
ஏழுமலை (அதிமுக) 3,86,954
செந்தமிழன் (அமமுக) 46,383
தமிழ் அரசி (நாம் தமிழர் கட்சி) 32,409












Click it and Unblock the Notifications