ஆரணி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: தரணி ஆளப் போகும் தரணி வேந்தன்.. அடி வாங்கிய கஜேந்திரன்!
ஆரணி: ஆரணி லோக் சபா தொகுதியில் ஆரணி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக சார்பில் தரணி வேந்தனும் அதிமுக சார்பில் கஜேந்திரனும் களமிறங்கினர்.. இந்நிலையில் இறுதி கட்ட நிலவரப்படி திமுக வேட்பாளர் தரணி வேந்தன் 1,90,783 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
2009ஆம் ஆண்டு வரை வந்தவாசி மக்களவைத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ஆரணி மக்களவை தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த தொகுதியில் ஆரணி, வந்தவாசி, செய்யார், போளூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதிகள் உள்ளன. 7,31,824 ஆண் வாக்காளர்களும், 7,58,507 பெண் வாக்காளர்களும், 109 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரத்து 440 வாக்காளர்கள் அங்கு இருக்கின்றனர்.

ஆரணி தொகுதியை பொருத்தவரை காங்கிரஸ் அங்கு பலமாக இருந்திருக்கிறது. வந்தவாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது 1980, 1984,1989, 1991, 2009,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல 1977, 2014 ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும் வெற்றி பெற்று இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றன.
குறிப்பாக பாமகவின் மதிமுக, மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன், காங்கிரஸ் மூத்த தலைவர்களான கிருஷ்ணசாமி பலராமன் ஆகியோரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். தொடக்கத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் இருந்த நிலையில் அதற்கு பிறகு அதிமுக திமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி இருக்கின்றன. வாக்கு வங்கியை பொறுத்தவரை அதிமுக திமுக தவிர்த்து பாமகவுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது.
இந்த தேர்தலில் தற்போது திமுக அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாகவே களம் காண்கின்றன. திமுக தரப்பில் தரணி வேந்தனும், அதிமுக தரப்பில் கஜேந்திரனும், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி களம் காண்கின்றனர்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 6,17,760 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3 லட்சத்து 86 ஆயிரத்து 954 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆம் போட்டியிட்ட செந்தமிழன் 46 ஆயிரத்து 383 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழரசி 32,409 வாக்குகளும் பெற்றார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
எம்.கே.விஷ்ணு பிரசாத்(காங்கிரஸ்) - 6,17,760
வி. ஏழுமலை(அதிமுக) - 3,86,954
செந்தமிழன்(அமமுக) -46,383
தமிழ் அரசி(நாம் தமிழர்) - 32,409
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
வி. ஏழுமலை(அதிமுக)-5,02,721
ஆர். சிவானந்தம்(திமுக)- 2,58,877
ஏ. கே. மூர்த்தி(பா.ம.க)2,53,332
எம். கே. விஷ்ணு பிரசாத்( காங்கிரஸ்)- 27,717
2009ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் முடிவுகள்:
எம். கிருஷ்ணசாமி(காங்கிரஸ்)-3,96,728
என். சுப்பிரமணியன்(அதிமுக)-2,89,898
இரா. மோகனம்(தேமுதிக)-1,05,729
எம். வேலாயுதம் (சுயேட்சை)14,919
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தகவல் படி திமுக வேட்பாளர் தரணி வேந்தன் அங்கு 190783 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளார். அவர் 329345 வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 275893 வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கணேஷ்குமார் 217260 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி62525 வாக்குகளும் பெற்றுள்ளார். அந்த வகையில் திமுக வேட்பாளர் தரணி வேந்தன் வெற்றிக் கோட்டை எட்டியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications