'டம்மி' பதவியில் இருந்து 'டபுள் டம்மி' பதவிக்கு தள்ளப்பட்ட ஆற்காடு! துரைமுருகனுக்கு "ஏறு முகம்"!
சென்னை: தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவராக 'வலம் வந்த' ஆற்காடு வீராசாமி இப்போது முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு 'தலைமை செயற்குழு உறுப்பினர்' என்ற பொறுப்பில் டபுள் டம்மியாக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. பொருளாளராக இருந்து கருணாநிதியின் வலது கரமாகவும் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்புடன் தலைமைப் பதவிகளில் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற நிலை உருவான போது ஆற்காடு வீராசாமி தமது பொருளாளர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் என்ற புதிய பொறுப்பில் ஆற்காடு வீராசாமி அமர வைக்கப்பட்டார். ஆனால் கடந்த சில ஆண்டுகாலமாக உடல்நலக் குறைவால் கட்சி நடவடிக்கைகளில் ஆற்காடு வீராசாமி தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வந்தார்.
அண்மையில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்ற போது 'தலைமை செயற்குழு உறுப்பினர்' என்ற முக்கியத்துவம் அல்லாத பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவது உறுதியானது.இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் ஆற்காடு வீராசாமி வகித்து வந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவிக்கு துணைப் பொதுச்செயலாராக இருக்கும் துரைமுருகனை நியமிப்பதாக கருணாநிதி அறிவித்தார்.
இதன் மூலம் தி.மு.க.வில் ஆற்காடு வீராசாமியின் 'செல்வாக்கு' அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications