"கருகுதா காவி?".. பாஜகவுக்கு ஷாக் தரப்போகும் "கூல் தலைவர்".. முளைத்த மேட்டர்.. எடப்பாடிக்கு குஷிதான்
சென்னை: கர்நாட மாநில தேர்தல் வேலைகளில் பாஜக முழுவீச்சில் இறங்கி செயல்பட்டு வந்தாலும், தமிழக அரசியல் களம் அனலடித்தபடியே காணப்படுகிறது.. குறிப்பாக, அமமுகவில் என்ன நடக்கிறது? டிடிவி தினகரன் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
"கூண்டுக்கிளியாய் இனி இருந்தது போதும், கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள்" என்று நிர்வாகிகளுக்கு எழுச்சியூட்டும்வகையில், சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்..
அந்தவகையில், தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கான விஷயத்தில் கவனம் செலுத்திவரும் அண்ணாமலை, கூட்டணி விஷயத்தில், மேலிடம் கவனித்து கொள்ளும் என்று ஒதுங்கிவிட்டார்.

நெருக்கம் : அதேசமயம், அதிமுக மேலிட தலைவர்களுடனும் நெருக்கமான போக்கு சமீபகாலமாகவே காணப்படவில்லை.. தற்போது கர்நாடக மாநில தேர்தல் விவகாரங்களில் அண்ணாமலை படுபிஸியாக இருக்கிறார் என்றாலும், ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.. ஒன்று தனித்து களமிறங்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த அதிமுக கண்டிப்பாக வேண்டும் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறாராம் அண்ணாமலை.. அந்தவகையில், ஓபிஎஸ், மற்றும் டிடிவி தினகரனுடன் இணக்கமான போக்கையே அண்ணாமலை கையாண்டு வருவதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு, "எடப்பாடியின் கூடாரத்தை கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை... அதனால், நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்" என்று தினகரனிடம் மாநில பாஜக தரப்பு பேசியதாம்.. இதைக்கேட்டு தெம்பான டிடிவியும், ஏப்ரல் 10-ம் தேதிக்கு மேல், தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க போவதாகவும், அப்போது நடத்தப்படும் மிகப்பெரிய கூட்டத்தில், எடப்பாடி டீமை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் அமமுகவில் இணைத்து ஷாக் தரப்போவதாகவும் செய்திகள் வலம்வந்தன.

ஆதரவு தந்த டிடிவி: அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை தன்னை ஒப்பிட்டு பேசுகிறாரே அண்ணாமலை, இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு தினகரன், "அம்மாவுடன் தன்னை ஒப்பீடு செய்யவில்லை என்பதை அண்ணாமலையே தன்னுடைய பேட்டியில் சொல்கிறார்.. அதே வேளையில் அம்மா, கருணாநிதி போல தானும் ஒரு தலைவன் என்கிறார்... அதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லையே" என்று சொல்லி, அண்ணாமலைக்கான ஆதரவை தினகரன் வீசியிருந்ததை இங்கு நினைவுகூரவேண்டி உள்ளது.
இப்படி மாநில தலைமையுடன் தினகரன் நெருக்கமாக இருந்தாலும்கூட, கூட்டணி என்ற விஷயத்தில் சற்று குழம்பி போயுள்ளாராம்.. ஈரோடு இடைத்தேர்தல் சமயத்தில், ஓபிஎஸ்ஸை பாஜக நடத்திய விதம் கண்டு, அதிர்ந்தே போனாராம் தினகரன்.. பாஜகவின் தீவிர விசுவாசியான ஓபிஎஸ்ஸுக்கே இந்த நிலைமை என்றால், தனக்கான நிலைமை என்னாகும்? என்பதையும் தினகரன் யோசிக்காமல் இல்லையாம்.. அதனால்தான், 2 மாதங்களுக்கு முன்புவரை, பாஜகவின் குரலாகவே ஒலித்து வந்த தினகரனின் குரல், தற்சமயம் லேசாக அடங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.
சிவகங்கை: இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. தென்மண்டலங்களில் அதிக வாக்குவங்கியை தன்னகத்தே வைத்திருக்கும் டிடிவி தினகரன், இந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிடலாம் என்று ஒரு எண்ணம் உள்ளதாம்.. காரணம், இங்கு காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட நேரிடும் என்பதால், தானும் நேரடியாக களமிறங்கி, காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து, அதன்மூலம் மேலிட பாஜகவின் நன்மதிப்பை நேரடியாகவே பெற்று விடலாம் என்று கணக்கு போட்டாராம்.. ஆனால், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால், அமமுக அந்த கூட்டணியில் இடம்பெற வேண்டாம் என்று நினைக்கிறாராம் தினகரன்.

காரணம், அதிமுகவுடன் பாஜக கூட்டணியே வைத்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு, அமமுகவில் தன்னை வெற்றி பெற செய்ய விடாது.. உள்ளடி வேலைகள், குழிபறிப்புகள் போன்றவற்றில் ஈடுபடலாம்.. கூட்டணி கட்சிக்காக அதிமுக இறங்கி வேலை செய்யுமா என்று தெரியாது.. எளிதாக மண்ணை கவ்வ நேரிடும் என்பதால், அதிமுக - பாஜக கூட்டணி வைத்தால் - போட்டியிட வேண்டாம் என தினகரன் நினைக்கிறாராம்.. வேண்டுமானால், பாஜக தனியாக போட்டியிட்டால் அவர்களுடன் கூட்டணியில் களமிறங்கலாம் என்றும்
மாத்தி யோசி: டிடிவி தினகரன் நினைக்கிறாராம்.. தினகரன் கணக்கு இப்படி இருந்தாலும், பாஜக என்ன முடிவெடுக்க போகிறது தெரியவில்லை.. பாஜகவை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுக என்றால், அதில் தினகரனும் அடக்கம்.. தென்மாநிலங்களில் ஓபிஎஸ், எடப்பாடியைவிட அதிக வாக்கு வங்கியை தினகரன் வைத்திருப்பதால், பாஜக லேசில் அவரை விட்டுவிடுமா தெரியவில்லை.. அதுமட்டுமல்ல, கடந்த முறை திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெருவாரியாக தென்மண்டலங்களில் அள்ளியது அமமுகதான்..

ஓபிஎஸ்ஸுக்கான வாக்கு சதவீதம் இதுவரை தென்மாநிலங்களில் எத்தனை சதவீதம் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. ஓபிஎஸ் ஏதாவது தேர்தலில் தனித்து நின்றால்தான் அவருக்கான பலம் என்ன என்பது பொதுமக்களுக்கு தெரியவரும். ஆனால், தென்மண்டலங்களில் அவருக்கு கணிசமான வாக்கு சதவீதம் உள்ளதாக நம்பப்பட்டு வருகிறது என்றாலும், தினகரனுக்கு அப்படியில்லை.. அவருக்கான பலம், பளிச்சென நிரூபணமாகி வருகிறது. அதனால், தினகரனை தவிர்த்துவிட்டு, பாஜக தேர்தல் கணக்கை முடிவுசெய்யாது என்கிறார்கள்.. இப்போதைக்கு கர்நாடக மாநில தேர்தல் வேலையில் பாஜக பிஸியாக இருப்பதால், அதற்கு பிறகுதான், தமிழக கூட்டணி விவகாரங்களில் கவனம் செலுத்துவார்கள் என தெரிகிறது.. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications