தைப்பூசம்.. பழனி போறீங்களா.. வருவாய்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பழனி: பழனி அடிவாரம், பேருந்து நிலைய பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், தைபூசத்தை ஓட்டி வருவாய்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
நாளை மறுநாள் தை பூசம் திருநாள் வருகிறது. பொதுவாக தைபூசம் நாள் அன்று கோவை, திருப்பூர், பழனி, ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் இருந்து மக்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். தைபூசம் அன்று பழனியில் சுமார் 5 முதல் 10 லட்சம் பேர் வரை கூடுவார்கள். பழனியில் தைபூசத்திற்கு வரும் பக்தர்கள் முதல் நாளே வந்து, பழனி அடிவாரம், பஸ்நிலைய பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகளில் தங்குவதும் வழக்கம்.

வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் பழனிக்கு வரும் பக்தர்கள் இந்த தங்கும் விடுதிகளில் தங்கி, சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்வார்கள். இந்த சூழலில் பழனி முருகன் கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி தற்போது வந்து கொண்டே இருக்கிறார்கள்.
அப்படி வரும் பக்தர்கள் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குவதற்காக முன்பதிவு செய்கிறார்கள். இந்நிலையில் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவார பகுதியில் உள்ள சில தங்கும் விடுதிகளில் தைப்பூச திருக்கல்யாணம், தேரோட்ட நாட்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது மற்ற நாட்களில் ஒரு கட்டணமும், மேற்கண்ட 2 நாட்களில் மட்டும் கூடுதல் கட்டணம் கேட்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும்விடுதிகளில் ஆய்வு செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பழனியில் உரிமம் இன்றி செயல்படும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதேபோல் தைப்பூச திருவிழாவையொட்டி தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மீறி வசூலித்தாலோ அல்லது அதுபற்றி புகார் வந்தால் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் வழங்குவதோடு 'சீல்' வைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications