ராஜிவ் கொலையில் விடுபட்டுப்போன விவகாரங்கள்.. விசாரிக்க கோரி தடா நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) மற்றும் பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு ஆணையத்தை (எம்.டி.எம்.ஏ)யும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பிரதிவாதியாகச் சேர்த்து பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
நான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டேன். தற்போது தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ளேன். அப்போதிருந்த ஆதாரங்களை மட்டும் வைத்து தடா நீதிமன்றம் எனக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ம் ஆண்டு உறுதி செய்தது.
பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு விசாரணை என்ன ஆனது?
இந்த வழக்கின் எப்.ஐ.ஆர். இன்னும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் விசாரணை காலதாமதம் ஆவதால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலரை இந்த வழக்கில் கொண்டு வரவில்லை. பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இதையெல்லாம் எஸ்.ஐ.டி. மற்றும் எம்.டி.எம்.ஏ. காட்டவில்லை.
ராஜீவ் கொலையின் பின்னணியில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டுபிடிப்பதற்காக மேல் விசாரணைக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மறு விசாரணை வேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல.
ஆவணங்களை தாக்கல் செய்க
இந்த விசாரணை அமைப்புகளால் நடத்தப்படும் பெயரளவு விசாரணையால் எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நீதிமன்றத்தின் கண்காணிப்பில் துரிதமான விசாரணை நடத்தப்படுவது அவசியம். முன்பு நடந்த விசாரணையில் விடுபட்டுப்போன பகுதிகளையும் விசாரணையில் சேர்க்க வேண்டும். இந்த விசாரணையை முன்பு நடத்தி இருந்தால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இந்த வழக்கில் இதுவரை சி.பி.ஐ.யின் இரண்டு விசாரணை அமைப்புகளும் மேற்கொண்டுள்ள விசாரணை ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ள படி, சதித்திட்டத்தில் ஈடுபட்ட சிலரை கண்டுபிடிப்பதற்கு மேல்விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். வெளிநாட்டினரின் பின்னணியும் இருக்கிறதா என்பதை சரியாக விசாரிக்கவில்லை.
சேஷன் சொன்னது பற்றி விசாரணை இல்லையே..
ராஜிவ் காந்தியின் மரணம் பற்றி ஜோதிடத்தின் மூலமாக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சேஷன் தமது புத்தகத்தில் கூறியுள்ளார். அப்படி என்றால், ஏன் ராஜிவ் பாதுகாப்பு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை? என்பதையெல்லாம் விசாரிக்கவில்லை.
எனவே இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இம் மனு மீதான விசாரணையை நீதிபதி தண்டபாணி வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications