அரியலூரில் அரசு வக்கீலின் குமாஸ்தா குடும்பத்தோடு தற்கொலை
அரியலூர்: அரியலூரில் அரசு வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மனைவி நிர்மலா, மகன் ரோகன் ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டு தானும் தீவைத்துக் கொண்டார். பெற்றோர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மகன் தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பலியானார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கந்துவட்டி தற்கொலையா, கடன் ஏதும் வாங்கியிருந்தா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications