ஒரு வக்கீல், ஒரு விவசாயி: அரியலூர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களின் விபரம்
சென்னை: அரியலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலரான வழக்கறிஞர் கே.என். ராமஜெயலிங்கமும், விவசாயி தாமரை எஸ். ராஜேந்திரனும் போட்டியிடுகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சீனியர்களான கே.என். ராமஜெயலிங்கம் மற்றும் தாமரை எஸ். ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:
கே.என். ராமஜெயலிங்கம்
ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும்
கே.என்.ராமஜெயலிங்கம்(63) பி.ஏ., பி.எல். படித்தவர். 1977-79ம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கையில் மாணவர் அணி பொருளாளர், செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர். 1972-80 வரை ஜயங்கொண்டம் ஒன்றிய அவைத் தலைவராக இருந்தார்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர், அரியலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை ஜயங்கொண்டம் தொகுதி செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் உள்ளார் அவர்.
தாமரை எஸ்.ராஜேந்திரன்
அரியலூர் தொகுதியில் போட்டியிடும்
தாமரை எஸ்.ராஜேந்திரன் 1960ம் ஆண்டு பிறந்தவர். 56 வயதான அவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாயம் செய்து வரும் அவர் 1981ம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினர் ஆனார்.
2013ம் ஆண்டில் இருந்து அரியலூர் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவராகவும், கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ள அவர் முன்னதாக தாமரைக்குளம் கிளைக்கழக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
-
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications