பக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்!
மனைவிக்கு தெரியாமல் கல்யாணம் செய்த கணவன் கைது செய்யப்பட்டார்
Recommended Video
கும்பகோணம்: புது பொண்டாட்டியுடன் மாலையும் கழுத்துமாக கணவனை பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முதல் பொண்டாட்டி ஸ்டெல்லாவுக்கு!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயசாகிறது. இவர் ஒரு ராணுவ சுபேதார். இவருக்கு 22 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆகிவிட்டது. மகாராஷ்டிராவில் தன் சொந்தக்கார பெண் ஸ்டெல்லாராணியைதான் கல்யாணம் செய்துள்ளார். ஸ்டெல்லாவுக்கு இப்போ வயசு 41!
காலேஜ் படிக்கிற ஒரு மகனும், பிளஸ் டூ படிக்கிற ஒரு மகனும் என 2 பேர் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வந்தது. அதனால் ஸ்டெல்லா கோபித்து கொண்டு, மகன்களை கூப்பிட்டு கொண்டு தன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.

சுபாஷ்
இந்த சமயத்தில்தான் இன்னொரு கல்யாணத்துக்கு ஆசைப்பட்டார் சுபாஷ். இதற்காக மேட்ரிமோனியலில் பெண்ணை தேடினார். முதல்ல நடந்த ஒரு கல்யாணம், பொண்டாட்டி, 2 பிள்ளைகள் இந்த விஷயம் எதையுமே சொல்லாமல், வரனை தேடினார்.

கல்யாணம்
அதன்படி மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை சுபாஷூக்கு பிடித்துவிட்டது. அந்த பெண்ணின் பெயர் நித்யா. வயசு 35. பெண் முடிவான உடனேயே, கொஞ்சமும் தாமதிக்காமல் கல்யாணம் செய்ய முடிவு பண்ணினார் சுபாஷ். நேத்துதான் கல்யாணம்.. கும்பகோணம் பக்கத்தில உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தாலி கட்டினார்.

சுவாமி மலை
இங்கதான் ஒரு ட்விஸ்ட்... தஞ்சாவூரில் இருக்கிற கோயில்களை சுற்ற பார்க்க ஸ்டெல்லா மகனுடன் ஊருக்கு வந்திக்கிறார். அப்படித்தான் நேற்று சுவாமிமலையில் சாமி தரிசனம் செய்தவர், திடீரென மாலையும் கழுத்துமாக சுபாஷ் நின்ற தரிசனத்தையும் பார்த்துவிட்டார்.

கைது
புது பொண்டாட்டி பக்கத்தில் நிற்க, மாப்பிள்ளை சுபாஷ் வாயெல்லாம் பல்லாக சிரித்து கொண்டிருந்தார். எதிரே வந்து நின்ற முதல் மனைவியை பார்த்ததும், வெலவெலத்து போனார். என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே சிலை போல நின்று கொண்டிருக்க, ஸ்டெல்லா நேராக போலீசுக்கு போய்விட்டார். புருஷன் செய்த காரியத்தை சொல்லவும், போலீசார் சுபாஷை கைது செய்து மாமியார் வீட்டுக்கு அழைத்து போனார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications