ஜெ.,அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதாவிற்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு உத்தரவிட்டார். 2015ல் நவம்பர் 6ல் பல்லடம் பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் சித்த மருத்துவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம்தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது தமிழக அரசு பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே. என்.சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியதாகவும்,அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டமாவட்ட முதன்மை மற்றும்அமர்வு நீதிபதி(பொறுப்பு) முகமது ஜியாவுதீன், விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும், இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் விஜயகாந்தும், பிரேமலதாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், இருவரும், 4 முறை விசாரணைக்கு ஆஜராகாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications