விஜயகாந்த்துக்கு எதிரான பெரம்பலூர் கோர்ட் பிடிவாரண்ட் ரத்து: செப். 12-ல் நேரில் ஆஜராக உத்தரவு
பெரம்பலூர்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை பெரம்பலூர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. செப்டம்பர் 12-ந் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் 14.8.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் விஜயகாந்த் பேசியதாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 23.11.2012-ஆம் தேதி அரசு வழக்கறிஞர் கே.குலோத்துங்கன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டார் நீதிபதி ஏ. நஷிமா பானு. இந்த நிலையில் விஜயகாந்துக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி, தேமுதிக வழக்கறிஞர் பாலாஜி நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை ஏற்றுக்கொண்டு பிடிவாரண்ட்டை ரத்து செய்து செப்டம்பர் 12-ந் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications