அருள்நிதிக்கு டும்... டும்... நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தில் கூடிய கருணாநிதி குடும்பம்!
சென்னை: நடிகரும், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதி. வம்சம், மௌனகுரு, தகராறு உள்ளிட்ட படங்களில் நடித்த, இவர் தற்போது நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அருள்நிதிக்கு திருமணம் ஏற்பாடு செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் மணமகளாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தயாளு அம்மாள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருப்பதால் கோபாலபுரம் இல்லத்திலேயே இந்த நிச்சயத்தார்த்தத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கருணாநிதி, தயாளு அம்மாள், ராஜாத்திஅம்மாள், தமிழரசு, துர்க்கா ஸ்டாலின், காந்தி அழகிரி, கனிமொழி என கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் வெளியூரில் இருப்பதால் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதேபோல், மு.க.அழகிரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications