ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை வேண்டும்.. ஆறுமுகசாமி புகார்
ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த செய்யும் விசாரணை ஆணையத்தின் செயலாளரான ஆறுமுகசாமி, வெற்றிவேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆர். கே நகர் தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த செய்யும் விசாரணை ஆணையத்தின் செயலாளரான ஆறுமுகசாமி காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது புகார் அளித்து இருக்கிறார்.
அவர் தனது புகாரில் ''ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டது விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் செயல்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே தேர்தல் நேரத்தில் மக்கள் மனதை பாதிக்கும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது 126 (1பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் மீது அடுத்த வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
இந்த புகாரை ஆறுமுகசாமி அண்ணா சதுக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications