For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் படிக்கச் சொன்னா தேர்தல் அறிக்கையை வாசிக்கிறாரே....: திருநாவுக்கரசர் கிண்டல்

பட்ஜெட்டுக்கு பதில் தேர்தல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டு உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    அருண் ஜெட்லியை கிண்டல் செய்யும் திருநாவுக்கரசர்-வீடியோ

    ஏர்வாடி : பட்ஜெட்டுக்குப் பதில் தேர்தல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.

    ஏர்வாடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் இல்லத் திருமணத்தில் பங்கேற்க நெல்லை வந்த காங்கிரசின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    Arun Jaitley filed 5 year plan instead of Budget Announcement

    அப்போது, தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. கிராணைட், மணல், மது உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தற்போது 20% வரை கமிஷன் வாங்கப்படுகிறது.

    அவற்றை முறைப்படுத்தினாலே பல்வேறு பிரச்னைகள் தீரும் ஆனால் அதை விட்டு விட்டு மத்திய மாநில அரசுகள் மக்களிடம் கை வைப்பது நிறுத்தப்பட வேண்டும்.

    ஆளும் பாஜக அரசின் கடைசி பட்ஜெட் இது. இதுவரை செய்த மக்கள் விரோத நடவடிக்கைகளால் அடுத்த முறை ஆட்சியில் இருப்போமா இல்லையா என்கிற பயத்தில் பாஜக இருக்கிறது. அதனால் பட்ஜெட்டுக்குப் பதில் தேர்தல் அறிக்கையை மாற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் அருண் ஜெட்லி .

    விரைவில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைக்கப்படும் அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து உள்ளன. விரைவில் பாஜகவின் ஆட்சி மத்தியில் இருந்து அகற்றப்படும். ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Arun Jaitley filed 5 year plan instead of Budget Announcement says Tamilnadu Congress Committee Leader Thirunavukkarasar. He also added that, soon Congress will rule India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X