For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடியோ காலில் நிர்வாணம்.. கொமட்டும் ஆபாச சைகைகள்.. பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட கல்லூரி சேர்மன்

Google Oneindia Tamil News

அருப்புக்கோட்டை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி தலைவர் தாஸ்வின் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்த கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் (38). இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

நம்பி வீட்டுக்குள்ள விட்டோம்! ஆனா அந்த 'எக்ஸ்’ என்னை.. பரபரப்பு பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை.!நம்பி வீட்டுக்குள்ள விட்டோம்! ஆனா அந்த 'எக்ஸ்’ என்னை.. பரபரப்பு பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை.!

 மறியல் போராட்டம்

மறியல் போராட்டம்

அந்த வீடியோ தற்போது அங்கு பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி மூடப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவிகள் போராட்டம்

மாணவிகள் போராட்டம்

மாணவிகளின் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

மாணவிகள்

மாணவிகள்

இதையடுத்து அந்த மாணவிகளிடம் டிஎஸ்பி சகாய ஜோஸ், வட்டாட்சியர் அறிவழகன், அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

 சேர்மேன் கைது

சேர்மேன் கைது

இதைத் தொடர்ந்து கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் என 2 பிரிவுகளின் கீழ் அருப்புக் கோட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து தாஸ்வின் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை விருதுநகர் கிழக்கு பாஜக பிறப்பித்துள்ளது.

English summary
Aruppukottai College Chairman Daswin John Grace was sacked from BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X