கமல் - கெஜ்ரிவால் சந்திப்பு... வெறும் லஞ்ச் மட்டும்தானா?- ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
சென்னையில் நடிகர் கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். ஆழ்வார்பேட்டையில் கமல் வீடு முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடிகர் கமலை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். செய்தியாளர்கள், காவல்துறையினர் குவிந்துள்ளதால் ஆழ்வார்பேட்டை பரபரப்படைந்துள்ளது.
டிவிட்டரில் நடிகர் கமல் தொடர்ந்து, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றுவருவதாக கமல் ஹாசன் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
மல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. கேரள முதல்வரை சந்திக்க சென்றபோது, தான் அம்மாநில அரசியலை கற்க வந்துள்ளதாக தெரிவித்தார் கமல்.
இந்த நிலையில்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்து நடிகர் கமலை சந்தித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் லஞ்ச்
கமலை சந்திக்க டெல்லியில் இருந்து வந்துள்ள கெஜ்ரிவால் எளிமையாகவே காணப்பட்டார். இருவரின் சந்திப்பு தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பாகவே பேசப்படுகிறது. கமல் வீட்டில் லஞ்ச் மட்டும் சாப்பிடுவாரா அல்லது கட்சி லாஞ்ச் பற்றி பேசினார்களா என்பது ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கே வெளிச்சம்.

ஊழல் எதிர்ப்பு
கமல் ஊழல் எதிர்ப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்தி திடீரென கட்சி தொடங்கி டெல்லி முதல்வரானவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

கமல் நிலைப்பாடு என்ன?
கமலின் அரசியல் வருகையை பாஜக உள்ளிட்ட பல கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சி முதலைகளை டெல்லியில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரான கெஜ்ரிவாலை சந்தித்துள்ளார்.

கட்சியா கூட்டணியா
கமல் தனிக்கட்சி தொடங்கி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேர்ப்பாரா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

குவிந்த கூட்டம்
ஆழ்வார் பேட்டையில் கமல் வீடு முன்பாக செய்தியாளர்கள் குவிந்துள்ளனர். காவல்துறையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் அடுத்த பரபரப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications