சென்னையில் கமலுடன் நாளை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சந்திப்பு- ஆம் ஆத்மியில் சேர அழைப்பு?
சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை சதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் நாளை சந்தித்து பேச உள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். தனிக்கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாக கூறி வருகிறார்

ட்விட்டரே ஆயுதம்
ட்விட்டரை தமது அரசியல் ஆயுதமாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார். விஜய் டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பொடி வைத்து பேசும் அரசியல் நையாண்டிகள் தலைப்பு செய்திகளாகிவிடுகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியில்?
இதனிடையே கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கட்சியில் சேருகிறார் என தகவல் பரவியது. அதை கமல்ஹாசன் மறுத்திருந்தார்.

கேஜ்ரிவால் நாளை சந்திப்பு
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கமல்ஹாசனை சந்திக்க உள்ளார். சென்னையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆம் ஆத்மிக்கு அழைப்பு?
இச்சந்திப்பின் போது கமல்ஹாசனை ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தனிக்கட்சி தொடங்குவேன் என ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் கேஜ்ரிவாலை டெல்லியில் கமல்ஹாசன் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications