ஆரியர், திராவிடர் விவகாரம்; விவாதப்பொருளாக்க விரும்பவில்லை: கருணாநிதி
சென்னை: ஆரியர், திராவிடர் குறித்து கட்ஜூ கூறியதை விவாதப் பொருளாக்க விரும்பவில்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நீதிபதி அசோக்குமார் நியமனத்தில் தி.மு.க. மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது'' என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக்குமாரை, நிரந்தர நீதிபதியாக நியமிப்பதில் அரசியல் தலையீடு இருந்தது என்று தன்னுடைய முகநூலில் சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ. இவர், தற்போது ஆரியர் மட்டுமல்ல, திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான் என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பேசிய நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, சமஸ்கிருதம் மொழி, பிற மொழிகளை எல்லாம் அழிக்கும் மொழி என்று கூறுவதை ஏற்க முடியாது. சமஸ்கிருதம் மொழி, அறிவியல் ரீதியான கட்டமைப்புகளை கொண்ட மொழியாகும்.
இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்து குடியேறினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஆரியர் வருவதற்கு முன்பு திராவிடர்கள் இங்கு குடியேறினார்கள். இதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது. எனவே, ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான்.
இவர்கள் குடியேறுவதற்கு முன்பு, வனப்பகுதியில் பூர்வீக குடிமக்களான பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். இந்த பழங்குடியினர்தான், இந்தியாவின் பூர்வீக குடிமக்களாவார்கள்.
தற்போது இந்து-முஸ்லிம் பிரச்சினை என்பது நம் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் இந்த பிரச்சினை இருந்தது வருகிறது. இந்த பிரச்சினையால்தான், நாடு முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்த கருத்து பற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதிலளித்த கருணாநிதி, ஆரியர், திராவிடர் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''கட்ஜூ கூறியதைப் பற்றி பேசி அதை விவாதப் பொருளாக்க விரும்பவில்லை'' என்றார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications