Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி.. விஷ சாராய வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி விஷசாராய வழக்குகள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை விஷ சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

As per CM Stalins order, cases of poisoned liquor have been transferred to CBCID - TN DGP

விஷசாராயம் குடித்ததில் எக்கியார் குப்பத்தில் 14 பேரும் சித்தமூரில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. விஷசாராயம் அருந்தியல் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனிடையே நேற்று பாதிக்கப்பட்ட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்து இருந்தார்.

அதேபோல், இது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் எனவும் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த வழக்குகள் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023) வரை 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண் 225/2023, சட்டப்பிரிவுகள் 120 (b), 328, 304(i) IPC r/w 7, 4(1)(i)4(1)(A)(i) TNP Act 1987-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

As per CM Stalins order, cases of poisoned liquor have been transferred to CBCID - TN DGP

அதோடு செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விஷச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண் 137/2023, சட்டப்பிரிவுகள் 174 Cr.PC@ 4(1A)TNP Act and 284,328,304(ii) IPC மற்றும் குற்ற எண் 138/2023, சட்டப்பிரிவுகள் 174 Cr.PC@ 4(1A)TNP Act and 284,328,304(ii) IPC-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளன.

15.05.2023 அன்று விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் தமிழக முதல்வர் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார். முதல்வரின் ஆணைக்கிணங்க 16.05.2023 இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+