வெதர்மேன் சொன்னது போன்றே சென்னையில் குளு குளு காற்றுடன் மழை.. சென்னைவாசிகள் குஷி
வெதர்மேன் தனது பேஸ்புக்கில் சொன்னது போன்றே சென்னையில் இன்று குளு குளு காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யும் என்று வெதர்மேன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அவர் சொன்னபடி மாலையில் சென்னையில் நல்ல மழை பெய்தது.
சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக தமிழகத்தின் வெதர் மேன் தன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரது பதிவில் ''இன்று 1000% வட தமிழகத்தில் மழை பெய்யும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், நேற்று போல் இன்றும் மழை பெய்ய சாத்தியக் கூறுகள் உள்ளன. இன்று சென்னையில் 50 கி.மீ. தொலைவில் கடல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு சென்னை மக்கள் குளுகுளு காற்றை உணர்வார்கள். காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசி இடையே புயல் காற்று வீசக்கூடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சொன்னது போன்றே, இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னையின் மையப் பகுதியான அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நல்ல குளிர் காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது.
அதே போன்று, கடலூர், மதுராந்தகம், மொரப்பாக்கம், பெரும்பாக்கம், மேல்மருவத்தூரில் அரைமணி நேரம் மழை அடித்து வாங்கியது. மேலும் அச்சிறுப்பாக்கம், சித்தாமூரிர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியுள்ளது.
அதே போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications