அடுத்த ஐசக் நியூட்டன் நீங்கதான்.. அது ஆப்பிளா, வடையா? அஸ்வினை கலாய்த்த நெட்டிசன்ஸ்!
கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. அதில் அவர் ஆப்பிள் சாப்பிடுவது போல வெளியிட்டு இருக்கும் புகைப்படம் மட்டும் வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக வைரல் ஆகியுள்ளது.
அவரின் அந்த ஆப்பிள் புகைப்படத்தை பலரும் டிவிட்டரில் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். சிலர் அவர் சாப்பிடுவது உண்மையாகவே ஆப்பிள் தானா என்று குழம்பிப் போய் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு கிரிக்கெட் உலகின் ஐசக் நியூட்டன் என்ற புதிய பட்டம் கொடுத்துள்ளனர். ஒரே ஒரு சாதாரண புகைப்படம் இவ்வளவு வைரல் ஆகும் என்று அவரே நினைத்து இருக்க மாட்டார்.
|
அஸ்வின் ஓய்வு
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட் சாதனையை அடைந்த பின் அஸ்வின் ஓய்வுக்காக ஊர் சுற்ற தொடங்கி இருக்கிறார். இதற்காக மத்திய பிரதேசத்தில் இருக்கும் 'பென்ச்' புலிகள் ரிசர்வ் காட்டிற்குள் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதில் அவர் ஆப்பிள் சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைபடம் வைரல் ஆகியுள்ளது.
|
அடுத்த நியூட்டன்
இந்த நிலையில் அந்த புகைப்படத்தை அனைவரும் கலாய்க்க தொடங்கினர். அதில் அவர் ஆப்பிளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ''அடுத்த நியூட்டன் நீங்கதான்'' என்று இவர் கூறியுள்ளார். நியூட்டனுக்கு ஆப்பிளை பார்த்து நிறைய யோசனைகள் வந்தது போல இவருக்கும் வந்து இருக்கிறது என்பது போல அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
|
அது வடையா
இந்த நிலையில் அவரது புகைப்படத்தை பார்த்து பலர் குழப்பமும் அடைந்தனர். அவரது கையில் இருப்பது ஆப்பிளா, மெது வடையாக என்று கேட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் ''அந்த காட்டுக்குள் இருப்பதால் சமயங்களில் எல்லாம் வித்தியாசமாக தெரிகிறது. அவர் கைகளில் இருப்பது மிருதுவான வடையா இல்லை ஆரோக்கியமான ஆப்பிளா'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
|
அஸ்வின் விளக்கம்
இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அஸ்வின் மிகவும் காமெடியாக பதில் அளித்தார். அதில் ''அது ரொம்பவும் மிருதுவாக இல்லாதா ஆப்பிள்'' என்று வித்தியாசமாக மீண்டும் குழப்பும் படி பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications