உயிருக்கு பயந்து ஓடிய அஸ்வினி.. விரட்டி சென்று கழுத்தை அறுத்த கொலையாளி.. சாலையெங்கும் ரத்தம்!
Recommended Video

சென்னை: சென்னையில் மாணவி அஸ்வினி, அழகேசன் என்பவரால், கொலை செய்யப்பட்ட இடத்தின் சுற்றுவட்டாரத்தில் அவரின் ரத்தம் வழிந்தோடியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில், பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை மதுரவாயலை சேர்ந்த அழகேசன் என்பவர் கல்லூரிக்கு அருகே கத்தியால் குத்தியும், கழுத்தையறுத்தும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதலால் இக்கொலை நடந்துள்ளது. அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளினார்.

தப்பியோடிய மாணவி
ஜாமீனில் வெளிவந்த அழகேசன், சுமார் ஒரு அடி நீளமுள்ள பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து கல்லூரியில் இருந்து இன்று மாலை வெளியே வந்த அஸ்வினியை குத்தி கொலை செய்ய முயன்றான். இதை பார்த்து பயந்துபோன அஸ்வினி, அங்கேயிருந்து உயிருக்கு பயந்து தப்பியோடியுள்ளார். விடாமல் விரட்டிய கொலையாளி அழகேசன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

துரத்திய கொலை
குத்துபட்டாலும், உயிரை காப்பாற்றிக்கொள்ள, அலறியபடியே அஸ்வினி ஓடியுள்ளார். அப்போது அவர் ஓடிய சாலையெங்கும் ரத்தம் சிந்தியது. இதை பார்த்தும் மனது இளகவில்லை கொலையாளி அழகேசனுக்கு. குறிப்பிட்ட தூரம் ஓடிய அஸ்வினியால் அதற்கு மேல் ஓட முடியவில்லை.

கழுத்தையறுத்த படுபாதகன்
ஒரு வீட்டின் அருகே சென்றபோது, அஸ்வினியின் ஓடும் வேகம் குறைந்தது. இனியும் குத்தக்கூடாது என முடிவு செய்த அந்த கொடூர கொலையாளி, பெண் என்றும் பாராமல், அஸ்வினியின் கழுத்தை பிடித்து அறுத்துவிட்டான். ரத்த வெள்ளத்தில் அஸ்வினி அங்கேயே துடிதுடித்து வீழ்ந்தார்.

தூக்கிப்போட்டு மிதித்தனர்
அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த சில இளைஞர்கள், நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலையாளி கையில் கத்தி இருந்தபோதும், அச்சப்படாத அந்த இளைஞர்கள், அவனை மடக்கி பிடித்து, தூக்கிப்போட்டு மிதித்தனர். வாய், முகத்தில் ரத்தம் வடியும் அளவுக்கு, அழகேசனை அடித்து விளாசினர். அதற்குள் போலீசார் அங்கே விரைந்ததால், கொலையாளியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சாலையில் வழிந்துள்ள ரத்தம்
அஸ்வினி குத்துபட்டு ஓடிய சாலையில் ரத்தம் வழிந்துள்ளது. போலீசார் அவற்றை பரிசீலனை செய்தனர். ரத்தத்தின் மீது மணலை போட்டு மூடி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் கண் எதிரில் நடந்த இந்த படுபாதக கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications