'ஏர்வாய்ஸுக்கு" ஆசைப்பட்ட அசினுக்குக் கடைசியில் கிடைத்தது 'மைக்ரோமேக்ஸ்'தான்!
சென்னை: மாங்கல்யம் தந்துனானே... சீக்கிரமே ஆசின் இந்த மந்திரக் குரலைக் கேட்கப் போகிறார் மணவறையில்... மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை ஆசின் மணக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இடத்தில்தான் நமக்கு கஜினி படக் கதை ஞாபகத்திற்கு வருகிறது. கஜினி பட நாயகன் சூர்யாவுக்கு வேண்டுமானால் ஷார்ட் டைம் மெமரி இருக்கலாம். ஆனா் படத்தை பல தடவை பார்த்த மக்களுக்கு கதை அவ்வளவு சீக்கிரம் மறக்காது இல்லையா.. மெமென்டோ படக் கதையும் கூடவே நினைவில் உள்ளதே...!

கஜினி படக் கதையில் இ்ப்படித்தான் சூர்யாவைக் காதலிப்பார் ஆசின். அதில் சூர்யா ஏர்வாய்ஸ் என்ற செல்போன் சேவை நிறுவனத்தின் அதிபராக வருவார். அவரைக் காதலித்து கடைசியில் பரிதாபமாக உயிரிழப்பார்.
சினிமாவில்தான் இப்படி செல்போன் சேவை நிறுவன அதிபரை மணக்க முடியாமல் ஆசின் கதையை பாதியிலேயே முடித்து விட்டார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு செல்போன் நிறுவன அதிபரை மணக்கப் போகிறார் ஆசின் என்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமையாகும். மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் பிரபலமான செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமாகும். ராகுல் சர்மா, விகாஸ் ஜெயின், சுமீத் அரோரா, ராஜேஷ் அகர்வால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. 2000மாவது ஆண்டில் இது உதயமானது.
எப்படியோ ஏர்வாய்ஸில் நடித்த ஆசினின் காதல் குரல் மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபரின் மைன்ட் வாய்ஸுக்குள் எட்டிப் பார்த்து இப்போது மேரேஜ் நியூஸ் வந்து விட்டது... எல்லாம் சுமூகாக முடிவடைய வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications
