சசிகலா முதல்வராவது "சூட்கேஸ்" ஜோதிடரின் கையில் இருக்கு!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா போல ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள சசிகலா தற்போது காத்திருப்பது ஆஸ்தான ஜோதிடரின் உத்தரவுக்காகத்தானாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ் கார்டனுக்கு போய் வரும் முக்கிய பிரமுகர்களுக்கு சூட்கேஸ் ஜோதிடரைத் தெரியும். ஜமால் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் போயஸ்கார்டனுக்கு செல்லும் போது சூட்கேசுடன் செல்வதால் இவரை சூட்கேஸ் ஜோதிடர் என்று அழைக்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்வார்.சில நாட்களில் பெயிலில் வெளியே வருவார் என்று கணித்து ஜோதிடர் ஜமால் சொன்ன போது யாரும் நம்பவில்லை. ஆனால் அது நடந்தது.

2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வெல்வீர்கள் என்று ஜெயலலிதாவிடம் சொன்ன போது அவரே அதை நம்பவில்லை. ஆனால், ஜமால் சொன்னது சொன்னபடி நடக்க சூட்கேஸ் ஜோதிடரான ஜமால் எப்போது சென்றாலும் போயஸ் கார்டனில் தனி செல்வாக்குப் பெற்றார்.

துல்லியமான கணிப்பு

துல்லியமான கணிப்பு

2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக 135 இடங்களில் வெற்றி பெறும் என்றும் இவர்தான் கூறினார். போயஸ் தோட்டத்திற்கு அப்பாயின்மெண்ட் இல்லாமல் செல்லக்கூடிய பர்மிஷன் பெற்றவர் இவர் மட்டுமே. முன் கூட்டியே கணித்து சொன்னவரும் அவரே.

ஆஸ்தான ஜோதிடர்

ஆஸ்தான ஜோதிடர்

கோட்டையிலும், போயஸ் தோட்டத்திலும் தன் கணிப்புகளால் செல்வாக்கோடு வலம் வந்த இந்த சூட்கேஸ் ஜோதிடர்தான், இப்போது சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடராம். அவர் சொன்ன தேதியில்தான் பொதுக்குழு வைத்தார்கள்.

காத்திருக்கும் சசிகலா

காத்திருக்கும் சசிகலா

முதல்வராகும் முடிவுக்கு வந்துவிட்ட சசிகலா காத்திருப்பது சூட்கேஸ் ஜோதிடரின் கணிப்புக்காக, அவர் குறித்துக் கொடுக்கும் தேதியில் சசிகலா முதல்வராவார் என்கின்றனர் அதிமுகவினர்.

தலையாட்டும் சசிகலா

தலையாட்டும் சசிகலா

சசிகலாவுக்கு ஜோதிடம் பார்த்து ஆரூடம் சொல்கிறார் ஜமால் அவர் குறித்துக் கொடுத்த நாள், நேரம், நட்சத்திரத்தில்தான், கட்சி பொதுக் குழுவை சசிகலா கூட்டினார். பொதுக் குழுவுக்கு நீங்கள் போக வேண்டாம் என சொன்னவரும் ஜமால்தான். இதேபோல் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்க டைம் குறித்து கொடுத்து சொன்னவரும் இவர்தான். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே சசிகலா செய்யத் துவங்கி உள்ளார்.

முதல்வராவது எப்போது?

முதல்வராவது எப்போது?

அவர் தற்போதைக்கு முதல்வராக பொறுப்பேற்க வேண்டாம் எனவும் சசிகலாவை அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில், அரசியல் ரீதியில் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் செய்து முடித்து விட்டு, தன்னிடம் சொன்னால், அதற்கேற்ப, பதவியேற்பு விழா நடத்த நாள், நட்சத்திரம் பார்த்து சொல்வதாகக் கூறியுள்ளாராம். இதனாலேயே, சசிகலா முதல்வராவது தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+