தினகரனை ஆட்டுவிக்கும் சசி ஜோதிடர்கள்! பிரசார திசை, நேரத்தையும் குறித்து கொடுக்கிறார்களாம்!
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன், தமது சின்னம் முதல் பிரசார நேரம் வரையில் அனைத்திலும் ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மட்டுமே செயல்பட்டு வருகிறாராம்.
சென்னை: தொப்பி சின்னத்தை தேர்வு செய்தது முதல் பிரசாரம் செய்யும் திசை, நேரம் என ஒவ்வொரு நகர்வையுமே சசிகலாவின் ஜோதிடர்களின் ஆலோசனையின்படியே செயல்படுகிறாராம் டிடிவி தினகரன்.
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவையும் ஆட்சியையும் முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் படுமும்முரமாக இருப்பவர் தினகரன். திவாகரன் உள்ளிட்ட அனைத்து மன்னார்குடி உறவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டார் தினகரன்.

நோ சசி படம்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மறந்தும் கூட சசிகலா படம் இருந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் தினகரன். இது சசிகலாவை கடுமையாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஜோதிடர்களுடன் ஆலோசனை
மற்றொருபுறம் தாம் எடுத்து வைக்கும் அனைத்து நகர்வுகளிலும் வெல்ல வேண்டும் என்பதிலும் படுதீவிரமாக இருக்கிறாராம் தினகரன். இதற்காக சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடர்களை நாள்தோறும் தமது வீட்டுக்கு வரவழைத்துவிடுகிறாராம் தினகரன்.

தொப்பி சின்னம்
சசிகலா அணிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் முதலில் ஒதுக்கியது. அப்போது இரும்பு பொருட்கள் உங்களுக்கு ஆகாது என கூறி தொப்பி சின்னத்தை தேர்வு செய்ய ஆலோசனை சொன்னதும் இதே ஜோதிடர்கள்தானாம்.

பிரசார திசை, நேரம்
அதேபோல் தினகரன் எந்த திசையில் இருந்து பிரசாரத்தை தொடங்க வேண்டும்; எந்த திசையில் எத்தனை மணிக்கு பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்பதையும் ஜோதிடர்களே தீர்மானித்து சொல்கின்றனராம். தாங்கள் சொல்வதை இம்மிபிசகாமல் தினகரன் செய்து வருவதால நம்ம காட்டில் நல்ல மழை என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம் ஜோதிடர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications