சுவாதி போல அஸ்வினி கழுத்தை அறுத்து கொலை - கல்லூரிக்கு விடுமுறை
நுங்கம்பாக்கம் சுவாதி போல மாணவி அஸ்வினியும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது போல கே கே நகர் கல்லூரி மாணவி அஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி கொலையால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அடி நீள கத்தியை வைத்து அந்த மாணவியின் கழுத்தில் குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி
மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் அஸ்வினி. கே கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி காம் படித்து வருகிறார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த அழகேசனுக்கு ஒருதலைக்காதல். விடாமல் விரட்டி தொந்தரவு செய்யவே தனது வீட்டை ஜாபர்கான் பேட்டைக்கு மாற்றினார் அஸ்வினி.

கழுத்தை வெட்டிய இளைஞர்
தொந்தரவு தொடரவே அழகேசன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அழகேசனை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அழகேசன் இன்று அஸ்வினியை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தான்.

காத்திருந்த அழகேசன்
சுகாதாரதுறையில் வேலை செய்து வரும் அழகேசன், அஸ்வினி மீது கடும் கோபத்தில் இருந்தான். கல்லூரி வாசலில் காத்திருந்த அழகேசனை கண்டு அதிர்ச்சியடைந்தார் அஸ்வினி. வாக்குவாதம் நடந்துள்ளது. அஸ்வினியை அழகேசன் விரட்டினார்.

கொலையான அஸ்வினி
அஸ்வினியை விடாமல் விரட்டிய அழகேசன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தினான். ரத்த வெள்ளத்தில் அஸ்வினி சாய்ந்ததை பார்த்த மாணவர்கள் அழகேசனை பிடித்து அடித்து உதைத்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் பதற்றமடைந்தனர். கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் அஸ்வினி துடித்துக்கொண்டிருந்தார்.

போகும் வழியில் உயிரிழப்பு
அஸ்வினி துடிப்பதைப்பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தோம். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதன் காரணமாகவே அஸ்வினி பலியாக காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவி கொலையால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைக்காதலில் சுவாதி கொலை செய்யப்பட்டார். அதே போல ஒரு கொலை தற்போது நிகழ்ந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications