தூத்துக்குடி லாக்கப்பில் இருந்த ஓட்டுநர் சாவு.... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் ஓப்படைக்கப்படட லாரி டிரைவர் பலியானதால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி : தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட லாரி ஓட்டுநர் திடீரென உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீரை வணிக பயன்பாட்டிற்கு எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டேங்கர் லாரிகளில் நிலத்தடி நீரை எடுத்து சென்று விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி தாசில்தார் தலைமையில் சிப்காட் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வல்லநாடு பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் நிலத்தடி நீரை எடுத்து வந்த லாரியை மடக்கி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அவர் நாலுமுக்கு எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரூபன்தாஸ் என்பது தெரிய வந்தது. அவர் அங்குள்ள டைட்டானியம் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக தெரிவித்த போதும் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அவரை சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அதிகாலை அவர் நெஞ்சுவலியால் துடிப்பதை பார்த்து போலீசார் அவசர சிகிச்சை ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரூபன்தாஸ் உறவினர்கள், மனித உரிமை அமைப்பினர் அரசு மருத்துவமனை பிணவறை முன்பு குவிந்தனர். அவர காவல் நிலையத்தில் இறந்ததில் மர்மம் உள்ளது. இதுகுறித்து முறையான நிதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications